விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சீதக்காதி’ சராசரி தமிழ்த் திரைப்படமாக அல்லாமல், வித்தியாசமான திரைப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரவேற்பால், படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
படக்குழுவின் முக்கிய நோக்கமே மேடை நாடக உலகம் மற்றும் அதன் கலைஞர்களுக்கு அர்ப்பணம் செய்வது என்பது தான். யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களை சென்று சேர்ந்திருக்கிறது படம். எனினும், அவர்கள் தனித்துவமான கருத்துடைய ஒரு திரைப்படத்தை தயாரிக்க கிடைத்த அட் ஹிர்ஷ்டத்தையே முழுமையாக மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள்.
ஹாலிவுட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கதையை எடுத்தது பெருமை. இந்த அற்புதமான படைப்பை உருவாக்கிய இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய, நாடக கலைஞர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள, அதன் வழியாக இன்று தமிழ் சினிமாவில் ‘மக்கள் செல்வன்’ ஆக மாறியுள்ள விஜய் சேதுபதி ஆகியோர் மீது மிகுந்த மரியாதையில் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...