விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த் என்று தமிழ் சினிமாவின் முக்கியமான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே அவ்வபோது வசூல் ரீதியாக போட்டி ஏற்பட்டாலும், இது பெரும்பாலும் ஜெயிப்பது என்னவோ விஜயாக தான் இருக்கிறார். தொடர்ந்து இரண்டு தீபாவளிக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த விஜய், தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும் பிரபலமாக உள்ளார்.
இப்படி விஜய் ஒவ்வொரு முறையும் தனது படத்தின் மூலம் வசூலில் புதிய சாதனையை படைக்க அதை முந்தும் வகையில் ரஜினிகாந்தின் படங்களும் வருகின்றன. இருப்பினும் சில நேரங்களில் ரஜினியால் கூட விஜயை முந்த முடியாமல் போவது தான் உண்மை. அப்படி ஒரு உண்மை மீண்டும் நிகழ்ந்திருப்பதால், விஜய் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகமடைந்துள்ளனர்.
ரஜினிகாந்தின் 2.0 படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான படம் என்பதால், அப்படத்தை உலகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட்டனர். படமும் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு தமிழகத்திலும் பெரும் வசூலை ஈட்டு வந்தது. இருப்பினும் ஒரு ஏரியாவில் 2018 விஜயின் சர்கார் படத்தின் வசூலை ரஜினியின் 2.0 படத்தால் முந்த முடியவில்லை.
அதாவது, கோயமுத்தூர் பகுதி திரையரங்குகளின் 2018 ஆம் ஆண்டு கலெக்ஷன்படி அதிகமாக வசூலித்த டாப் 10 படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜயின் ’சர்கார்’ முதலிடத்தை பிடிக்க, ரஜினிகாந்தின் 2.0 இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
’கடைக்குட்டி சிங்கம்’ மூன்றாவது இடத்தையும், ‘தானா சேர்ந்த கூட்டம்’ நான்காவது இடத்தையும், ‘காலா’ ஐந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.
இதே அந்த பட்டியல்,
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...