தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வரும் மைம் கோபி, மைம் கலை மற்றும் நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் உள்ளார். என்ன தான் பிஸியான நடிகராக இருந்தாலும், அவ்வபோது மைம் கலை மூலம் பல நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் நிதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கி வருவதோடு, பல சமூக தொண்டுகளுக்களையும் செய்து வருகிறார்.
அந்த வகையில், ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் உதவும் நோக்கில், சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியுடன் இணைந்து மைம் நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் மைம் கோபி நடத்தினார்.
டான் போஸ்கோ பள்ளி வளாக கலையரங்கில் நடைபெற்ற இந்த மைம் நிகழ்ச்சியில் நடிகர்களாக டான் போஸ்கோ பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து நடிக்க வைத்தனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் மைம் கோபி கூறுகையில், “குழந்தைப் பருவத்தில் நாம் சொல்லிக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள் தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது. நல்ல பழக்கங்களும், உதவும் எண்ணமும், மனிதாபிமானமும் சிறு வயதிலிருந்தே நாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் டான் போஸ்கோ பள்ளி மாணவர்களை மைம் கலையை சொல்லிக் கொடுத்து அதை மேடையேற்றி அதில் வரும் நிதியை புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ உதவிக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று முடிவு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம்.
தான் நடித்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாய் எங்கோ இருக்கும் ஆதரவற்றவர்களுக்கும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவ உதவிக்கும் உதவப்போகிறது என்பதை இந்த மாணவர்களுக்கு உணர்த்தினோம். மாணவர்களும் ஆர்வத்துடன் இந்த மைம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் மத்தியில் உதவும் குணத்தை ஏறபடுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த டான் போஸ்கோ பள்ளி பங்குத்தந்தை லூயி பிலிப் மற்றும் நிற்வாகத்தினருக்கு எனது நன்றிகள்.” என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் நந்தகுமார், நடன இயக்குனர் சாண்டி, இமான் அண்ணாச்சி, நடிகை அர்ச்சனா, நடிகர் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...