சமீபகாலமாக ரஜினிகாந்த், தனது ஸ்டைலை மாற்றிக்கொண்டு நடித்து வருவது வரவேற்கும்படியாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் என்னவோ, பழைய ரஜினியை பார்க்க முடியலையே, என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அவர்களது கவலையை போக்கும் விதத்தில் இருக்கிறது ‘பேட்ட’ படத்தின் டிரைலர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால், ரஜினிக்கு பெரிதாக வேலை இருக்காதோ, என்று அவரது ரசிகர்கள் கவலைப்பட்ட நிலையில், இன்று வெளியான ‘பேட்ட’ டிரைலர் அவர்களது கவலையை போக்கி, அவர்களை ஹாப்பியாக்கியுள்ளது. அந்த அளவுக்கு செம மாஸாக டிரைலர் உள்ளது.
இளமை ததும்பும் லுக்கில் ரஜினிகாந்த் காட்டும் அதிரடியும், பேசும் அதிரடி வசனங்களும் ஒரு பக்கம் இருக்க, ஹைடெக் மேக்கிங்கில் பிரம்மாண்டமான காட்சிகள் மறுபக்கம் வியக்க வைக்கிறது. இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடிய டிரைலரில் செம கெத்து காட்டும் ரஜினிகாந்த், முழு படத்தில் எப்படியெல்லாம் கெத்து காட்டியிருப்பாரோ! என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘பேட்ட’ டிரைலர் ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களையும் ஹாப்பி மூடுக்கு அழைத்து சென்றிருக்கிறது.
இதோ அந்த டிரைலர்,
https://www.cinemainbox.com/trailers/petta-movie-official-trailer-171-7.html
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...