கஸ்தூரி விவகாரத்தில் அஜித் மேனஜர்! - புது சர்ச்சையால் பரபரப்பு
Saturday December-29 2018

90 களில் பல படங்களில் ஹீரோயினாக நடித்த கஸ்தூரி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்று தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிப்பவர், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுவது, டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்று தனது கலை பணியை தொடர்ந்துக் கொண்டு இருந்தாலும், சமூக வலைதளம் மூலமாக அவர் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறார்.

 

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களை கலாய்த்து ட்வீட் போடும் கஸ்தூரி, சமூக பிரச்சினை குறித்தும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசி வருகிறார். இதை விட, ரசிகர்களிடம் சகஜமாக ட்வீட்டரில் பதிவு மூலம் பேசும் கஸ்தூரி, தன்னை இழிவாக பேசும் ரசிகர்களுக்கு அதிரடியான பதில் அளிப்பதோடு, எந்த விஷயம் பற்றி பேசினாலும், ஓடி ஒளியாமல் பேசிக்கொண்டே இருப்பார். அப்படி அவர் பேசுவதை சில ரசிகர்கள் தவறாக எடுத்துக்கொண்டு அவரை ரொம்பவே கீழ்த்தரமாக விமர்சிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது.

 

குறிப்பாக, அஜித் ரசிகர்கள் சமீபகாலமாக கஸ்தூரியியுன் மல்லுக்கட்டுவதோடு, அவரை ரொம்பவே அசிங்கமாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து வருகிறார்கள். அப்படி விமர்சிப்பவர்களுக்கு கஸ்தூரியும் தகுந்த பதிலடி கொடுத்தாலும், இந்த பிரச்சினை நின்றபாடில்லை.

 

இந்த நிலையில், பெண் உரிமை குறித்து ட்வீட்டரில் கஸ்தூரி கருத்து கூறியதற்கு, பதில் அளித்திருக்கும் அஜித் ரசிகர் ஒருவர், ”உண்ணோட உரிமையை நான் சொல்றேன், சில ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி அருணா லாட்ஜில் நான் ரிஷப்னிஷ்ட்டா இருந்தேன், அதே லாட்ஜில் நீ ரூம் போட்டு இருந்த, உன்ன பாக்க ஆண்கள் நிறைய பேர் வந்தாங்க, பெண்கள் வந்தாங்க, திரும்ப திரும்ப வந்தாங்க. நான் என்னுடன் இருந்தவரிடம் விபரம் கேட்டேன், அக்கா தான் விருந்து.” என்று பதிவிட்டுள்ளார்.

 

இந்த பதிவால் கோபமடைந்திருக்கும் கஸ்தூரி, ”மானம் ரோஷமுள்ள அஜித் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள், இந்த கூமுட்டையின் விவரம் அறிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.” என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், அஜித்தின் மேனஜர் சுரேஷ் சந்திராவின் ட்வீட்டர் கணக்கை  டாக் செய்து, “இந்த விஷயத்தை பெரிதாக்கவும்” என்றும் குறிப்பிட்டதுடன், ’டர்ட்டி அஜித் பேன்ஸ்’ என்றும் ஹஸ்டேக் உருவாக்கியுள்ளார்.

 

ரசிகர்களே வேண்டாம் என்று சொல்லும் அஜித் சொல்லியிருக்க, அவரது ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் இதுபோன்ற சில்மிஷங்களை அஜித் தரப்பிடம் முறையிட்டிருக்கும் நடிகை கஸ்தூரிக்கு உரிய நியாயத்தை பெற்றுக்கொடுப்பாரா அஜித் மேனஜர் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

 

 

Related News

3972

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

Recent Gallery