‘பாகுலி’ படத்தின் இரண்டு பாடகங்கள் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநராகியுள்ள இவர், தற்போது ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இதற்கிடையே, ராஜமெளலி தனது மகன் கார்த்திகேயாவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். நாளை கார்த்திகேயாவின் திருமணம், ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமான முறையில் நடக்க இருக்கிறது. இதற்காக, இந்தியாவின் முக்கிய நபர்கள் பலர் ஜெய்ப்பூருக்கு செல்கின்றனர்.
இந்த திருமணத்திற்காக கிட்டதட்ட தெலுங்கு திரையுலகினர் அனைவரும் செல்ல இருக்கும் நிலையில், ‘பாகுபலி’ பட நாயகி அனுஷ்கா, இரண்டு நாட்களுக்கு முன்னதாக, முதல் ஆளாக ராஜமெளலியின் மகன் திருமணத்திற்கு சென்றிருக்கிறார்.
ராஜமெளலியின் படத்தில் ஹீரோயினாக நடித்த அனுஷ்கா, படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குநர் போல பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது ராஜமெளலியின் மகன் கல்யாணத்திலும் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...