2018 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மட்டும் 171 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சுமார் 200 தொடும் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு என்னவோ குறைவு தான்.
இந்த நிலையில், 171 திரைப்படங்களில் அதிகமான படங்களில் நடித்த ஹீரோக்கள் பட்டியலில், விஜய் சேதுபதி முதலிடத்தை பிடித்து டாப்பில் இருக்கிறார்.
ஜுங்கா, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், செக்கச்சிவந்த வானம், 96, சீதக்காதி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி, டிராபிக் ராமசாமி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய இரு படங்களில் கெளரவ வேடங்களில் நடித்திருக்கிறார். மொத்தம் இந்த ஆண்டு 7 படங்களில் நடித்து முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
அவருக்கு அடுத்து பிரபுதேவா, கவுதம் கார்த்திக், விக்ரம் பிரபு, விதார்த் ஆகியோர் தலா 3 படங்களிலும், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், அரவிந்த்சாமி, அதர்வா, விஜய் ஆண்டனி, ஜெய், விமல், ஜி.வி.பிரகாஷ், தினேஷ் ஆகியோர் தலா 2 படங்களில் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி, சிம்பு, கார்த்தி, ஜீவா, ஆர்யா ஆகியோர் தலா ஒரு படத்தில் நடித்துள்ளனர்.
முன்னணி நடிகராக இருக்கும் அஜித், இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...