தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அனுஷகா ‘பாகுபலி’ இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். அப்படங்களுக்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். காரணம், அவர் உடல் அதிகரித்திருப்பது தான். தற்போது உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அனுஷ்கா ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம். அதில் அவர் கண் பார்வை இல்லாத, காது கேட்காத பெண்ணாக நடிக்கிறாராம்.
ஏராளமான பட வாய்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் தவிர்த்து வந்த அனுஷ்கா, இப்படத்தை ஒப்புக்கொண்டதற்கு காரணம், இந்த வேடம் தனக்கு சவாலாக இருக்கும் என்பதாலும், இப்படத்தின் மூலம் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என்பது தானாம்.
மேலும், இந்த வேடத்திற்காக தற்போது பார்வையற்றவர்களை சந்தித்து அவர்களுடன் பழகி வரும் அனுஷ்கா, அவர்களது மன நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து அதைப்போன்று தனது நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறாராம்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...