தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் நடிப்பது மட்டும் இன்றி, சொந்தமாக பல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். மேலும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என இரண்டு பொறுப்புகளிலும் இருக்கிறார்.
நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் முடிந்த பின்னரே திருமணம் செய்துக்கொள்வேன், என்று விஷால் கூறிவருகிறார். இதற்கிடையே, விஷாலும், நடிகை வரலட்சுமியும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்வதாகவும் தகவல் வெளியான நிலையில், இதை இருவரும் மறுத்துள்ளனர்.
இந்த நிலையில், விஷாலுக்கு பெண் பார்ப்பதில் தீவிரம் காட்டிய அவரது குடும்பத்தார், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை விஷாலுக்கு பேசி முடித்துள்ளார்கள். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தத்தில் திருமண தேடி முடிவு செய்யப்பட உள்ளது.
நடிகர் சங்க கட்டிட பணி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் புதிய கட்டிடம் திறக்கப்பட்டு விடும் என்பதால், விஷாலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
நிச்சயதார்த்தத்திற்காக விஷால் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் விரைவில் ஐதராபாத் செல்ல இருக்கிறார்கள்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...