Latest News :

முறிந்துபோன ஆல்யா மானசா காதல்! - காரணம் இது தான்!
Monday December-31 2018

இன்று நள்ளிரவோடு 2018 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில், பல துறைகளில் இந்த ஆண்டு மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து திரும்பி பார்க்கையில், சின்னத்திரையில் முக்கிய நிகழ்வாக ஆல்யா மானசாவின் காதல் மற்றும் காதல் முறிவு பற்றியும் பேசப்படுகிறது.

 

மக்களிடம் பிரபலமாக உள்ள சின்னத்திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக இருப்பவர் ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான இவர், டப்மாஸ் மூலமும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவரின் மனதை கொள்ளையடித்தது மானஸ்.

 

ஆல்யா மானசா என்ற பெயருக்கு பொருத்தமான ஜோடியாக அமைந்த மானாஸிடம் முதலில் காதலை தெரிவித்த ஆல்யா மானசா, தற்போது அவரது காதலை முறித்துக்கொண்டு ராஜா ராணி சீரியல் ஹீரோ சஞ்சீவை காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், நாம் இப்போது சொல்லப் போவது, ஆல்யா மானசாவின் முதல் காதல் முறிவுக்கான காரணம்.

 

ராஜா ராணி சீரியலில் கமிட்டாவதற்கு முன்பாகவே டான்ஸ் நிகழ்ச்சி மூலம் ஆல்யா மானசாவும், மானஸும் நெருக்கமாகி பிறகு தங்களது காதலை வெளிப்படையாகவும் அறிவித்த நிலையில், திடீரென்று இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை பிறகு இவர்களது காதல் உடையும் அளவுக்கு பெரிதானது. இதன் பிறகு மானஸ் தனது தோழி சுபிக்‌ஷாவுன் நெருக்கம் காட்ட தொடங்கி தற்போது அவரை திருமணமும் செய்துகொள்ள இருக்கிறார். அதேபோல், ஆல்யா மானசாவும், சஞ்சீவை காதலிப்பது குறித்து வெளிப்படையாக அறிவித்ததோடு, ராஜா ராணி சீரியல் முடிந்ததும் திருமணமும் செய்துகொள்ளப் போகிறார்.

 

இந்த நிலையில், ஆல்யா மானசா - மானாஸ் காதல் உடைய இருவருக்கும் இடையே இருந்த ஈகோ தான் காரணம், என்று கூறும் அவரது நண்பர்கள், அவர்கள் இருவரும் காதலிப்பது தெரிந்தும், சிலர் அவர்களின் காதலில் பல வில்லங்கத்தை ஏற்படுத்தினார்களாம். அதை அறியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் கோபித்துக் கொண்டு பேசாமல் இருக்க, ஒரு கட்டத்தில் அவர்களது கோபத்தை அதிகரிக்கும் வகையில் சிலர் பார்த்த சில வேலைகளால் அவர்களது காதல் முறிந்ததாக சிலர் கூறுகிறார்கள்.

 

Alya Manasa

 

அதே சமயம், ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசா நடிக்க கூடாது, என்று மானஸ் கட்டுப்பாடு விதித்ததாகவும், அதனால் தான் இருவருக்கும் இடையே பிரச்சினையே ஏற்பட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

 

எது எப்படியோ, 2019 ஆம் ஆண்டில் ஆல்யாவும், மானஸும் புதிய ஜோடியுடன் தங்களது புது வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்க நாம் வாழ்த்துவோம்.

Related News

3983

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery