இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக உள்ள பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். கதையின் நாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என்று பல வகையான வேடங்களில் நடிப்பதோடு, திரைபப்டங்களை சொந்தமாக தயாரித்தும், இயக்கியும் வருகிறார்.
இதற்கிடையே, கடந்த சில காலமாக ஆளும் மத்திய பா.ஜ.க அரசை நேரடியாக விமர்சித்து வரும் பிரகாஷ்ராஜ், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த புந்தாண்டில் அதிரடியாக அரசியலில் இறங்கும் தனது திட்டத்தை பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார். வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த கட்சியின் சார்பில், எந்த தொகுதியில் போட்டியிட போகிறார், என்பதை அறிவிக்கவில்லை. அதுபற்றிய விபரங்களை விரைவில் அறிவிக்க உள்ளாராம்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...