கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்காக ‘காப்பான்’, ‘மீட்பான்’, ‘உயிர்கா’ ஆகிய மூன்று தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ‘காப்பான்’ என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பை பஸ்ட் லுக் போஸ்டருடன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று 12.10 மணிக்கு வெளியிடப்பட்டது.
இதில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஹீரோயினாக சாயிஷா நடிக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீத முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஜனவரி 17 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...