Latest News :

கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் இசைக்குழுவின் ‘மகிழ்ச்சி’ இசை ஆல்பம் ரிலீஸ்!
Tuesday January-01 2019

இயக்குநர் பா.இரஞ்சித் உருவாக்கிய கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் இசைக்குழுவின் முதல் இசை மற்றும் வீடியோ ஆல்பமான ‘மகிழ்ச்சி’ பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது.

 

பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த மாதம் 29,30,31 ஆகிய மூன்று நாட்களுக்கு ‘வானம்’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வந்தது. நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல்கள், தெருக்கூத்து, தனி இசைக்கலைஞர்களின் பாடல்கள், புத்தக கண்காட்சி, சிலைகள் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, இதுவரை மேடை ஏறாத பல கலைஞர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

இறுதி நாளானா நேற்று, கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் இசைக் குழுவினரின் முதல் இசை ஆல்பமான மகிழ்ச்சி வெளியிடப்பட்டதோடு, அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும், கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் இசைக்குழுவினர் மேடையில் பாடினார்கள். மேலும், ஆல்பத்தில் உள்ள ஒரு வீடியோ பாடலும் திரையிடப்பட்டது. இதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கிராமத்து பாடகி சின்னபொண்ணு, பாடகர்கள் யோகிபி, பவுல் ஜேக்கப், நடிகை ரித்விகா, நடிகர்கள் கலையரசன், ஜானி, பாடலாசிரியர் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு ஆல்பத்தை வெளியிட்டனர்.

 

இந்த பாடல் தொகுப்பில் எட்டு பாடல்கள்  இடம்பெற்றுள்ளன. இசையமைப்பாளர்  தென்மா  இசையமைத்துள்ளார். இதில் மகிழ்ச்சி என்கிற பாடலை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். நடன இயக்குநர் சாண்டி குழுவினர் இதில் நடனமாடியுள்ளனர். நடிகர் கலையரசன், ஜானி, லிங்கேஸ் உள்ளிட்டோரும் இதில் நடனமாடியுள்ளனர்.

 

Casteless Collective Music team

 

நிகழ்ச்சியில் பேசிய பா.இரஞ்சித், “நமது சமூகத்தில் ஏற்றத்தாழவு, சாதி, வர்க்கம் என்று சமத்துவமில்லாத மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடையே இருக்கும் பிரிவினைகளை அகற்ற நமது கலைகள் வழியாக ஒரு மாற்றத்தை உண்டுபண்ண நமக்குள் இருக்கும் சாதி, மதம், வர்க்கம் இவற்றை களைந்து சமத்துவமாக இந்த புத்தாண்டை கொண்டாடவே இந்த நிகழ்ச்சி. வெற்றிகரமாக நடந்து முடிந்தது பெரும் மகிழ்ச்சி. தொடர்ந்து இது போன்ற சமத்துவ விழாக்களை நாம் நடத்துவோம்.” என்றார்.

Related News

3987

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery