பேண்டசி காமெடிப் படமாக உருவாகியுள்ள ‘மாணிக்’! - 4 ஆம் தேதி ரிலீஸ்
Wednesday January-02 2019

சிவகார்த்திகேயன் வழியில் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு எண்ட்ரியாகியிருக்கும் மா.கா.பா.ஆனந்த், தொலைக்காட்சியில் காமெடியான தனது காம்ப்பயரிங் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர், வெள்ளித்திரையிலும் தனது காமெடியான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

’நவரச திலகம்’, ‘கடலை’, ‘அட்டி’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாணிக்’. இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், படத்தின் டைடிலும், ஆனந்தின் கெட்டப்பும் தான். இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் டிரெண்டான இப்படத்தின் டிரைலரும் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், வரும் ஜனவரி 4 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

 

நாளைய இயக்குநர்கள் போட்டியில் வெற்றிவாகை சூடியதுடன், பல விருதுபெற்ற குறும்படங்களையும் இயக்கியிருக்கும் மார்டின், இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். தரண்குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக சூஷா குமார் நடித்திருக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

 

பேண்டசி காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி, ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்தும்,  வத்சன் வீரமணியும், பெரிய விஷயம் ஒன்றில் சாதிப்பதற்காக, ஆசிரமத்தை விட்டு வெளியேற, அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா, என்பதை பேண்டசியாகவும், காமெடியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

 

மோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம்.சுப்பிரமணியன் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related News

3996

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery