"தமிழ் மொழி எனக்கு கடினமாக இருந்தாலும், அதன் மீது நான் காதல் வயப்பட்டிருக்கிறேன்! விரைவில் வெளியாக இருக்கும் ராஜா மந்திரி திரைப்படம் மூலமாக தான், தமிழ் ரசிகர்கள் என்னை எவ்வாறு ஏற்று கொள்கிறார்கள் என்பது தெரியும்", என்கிறார் கேரளத்து அழகு புயல் ஷாலின் சோயா.
இயக்குனர் சுசீந்தரனின் உதவியாளரான உஷா கிருஷ்ணன் இந்த படத்தை இயக்க, எலக்ட்ரா எண்டெர்டெயின்மெண்ட் வி.மதியழகு, ஆர்.ரம்யா மற்றும் இணை தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
"இந்த படத்தில் நான் நடிக்க தொடங்கியதுமே, எனக்கு வேறு மொழிகளில் இருந்து வாய்ப்புகள் வந்தன. ஆனால் முதலில் தமிழக மக்கள் என்னை ஏற்று கொண்டால் தான் மற்றதை பற்றி யோசிக்க முடியும்", என்கிறார் ஷாலின்.
மேலும் படத்தின் கதையை பற்றி அவர் கூறுகையில், "அண்ணன் - தம்பி இருவர்க்கும் இடையே ஆன உறவை எதார்த்தமாக கூறும் படம் தான் 'ராஜா மந்திரி'. கலையரசன் மற்றும் காளி வெங்கட் நடிக்கும் இந்த படம் முற்றிலும் நகைச்சுவை அம்சங்களை கொண்டது" என்று சொல்கிறார் ஷாலின் சோயா.
நடிப்பு மட்டும் இல்லாமல், இயக்கத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஷாலின். தனது கல்லூரி காலங்களில் பல குறும்படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...