Latest News :

சூர்யாவின் புதுப்படம் இணையத்தில் லீக் - படக்குழு அதிர்ச்சி!
Thursday August-31 2017

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், படப்பிடிப்பு எடுக்கப்பட்ட சில காட்சிகளின் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு, வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் நிறையபேர் ஷேர் செய்தும் வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.

 

இதையடுத்து தயாரிப்பு தரப்பு, இந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதற்கு பயன் இல்லாமல் போய்விட்டது. ஒரு தளத்தில் இருந்து வீடியோவை நீக்கினால், மற்றொரு தளத்தில் வீடியோ பகிரப்படுகிறது. 

 

படத்தின் முக்கியமான காட்சிகள் இப்படி பரவி வருவதால், சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், இது தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன், ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், அன்பான ரசிகர்களே, தயவு செய்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ காட்சிகளை பகிர்ந்து பார்த்து ஊக்குவிக்காதீர்கள். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம் மீதியுள்ளது. அது முடிந்ததும் டீசர், பாடல்கள் குறித்து ம்டுவி செய்துவிடலாம். என்று தெரிவித்துள்ளார்.

 

’நானும் ரவுடி தான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Related News

400

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

Recent Gallery