Latest News :

மூத்த சினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் - சிவாஜி’ விருது
Thursday January-03 2019

தமிழ் சினிமாவின் முன்னணி மக்கள் தொடர்பாளர்களான மெளனம் ரவி, டைமண்ட் பாபு, ரியாஸ் அஹமது, சிங்காரவேலு ஆகியோர் இணைந்து நடத்தி வரும் வி4 அமைப்பு மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி ‘எம்ஜிஆர் - சிவாஜி விருதுகள்’ என்ற தலைப்பில் சினிமா நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சினிமா பத்திரிகை நிருபர்களுக்கும் விருது வழங்கி வருகிறார்கள்.

 

அந்த வகையில், 2018 ஆம் ஆண்டுகான எம்ஜிஆர் - சிவாஜி விருது வழங்கும் விழா ஜனவரி 1 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவின் கீழ் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

 

பத்திரிகைத் துறையில் சிறப்பான சேவை செய்பவர்களுக்கு வழங்கப்படும் சிறந்த பத்திரிகையாளருக்கான விருது மூத்த சினிமா பத்திரிகை நிருபரான செய்யாறு பாலு அவர்களுக்கு வழங்கப்பட்டது. பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நடிகை அம்பிகா இணைந்து நிருபர் செய்யாறு பாலுவுக்கு சிறந்த பத்திரிகை நிருபருக்கான ‘எம்ஜிஆர் - சிவாஜி 2018’ விருதை வழங்கினார்கள்.

 

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வரும் செய்யாறு பாலு, குமுதம் உள்ளிட்ட பல முன்னணி வார இதழ்கள் மற்றும் தினசரி நாளிதழ்களில் பணியாற்றியுள்ளார். தற்போது முன்னணி தமிழ் நாளிதழான தினமலரின் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் பதிப்புகளில் சினிமா நிருபராக பணியாற்றி வருகிறார்.

Related News

4002

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery