’அடங்க மறு’ இயக்குநருடன் மீண்டும் இணைவேன்! - ஜெயம் ரவி
Thursday January-03 2019

அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அடங்க மறு’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் படக்குழுவினர் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

ஹீரோ ஜெயம் ரவி, ராஷி கண்ணா, வசனகர்த்தா விஜி, எடிட்டர் ரூபன், இயக்குநர் கார்த்திக் தங்கவேலு, நடிகர்கள் முனிஷ்காந்த், அழகம் பெருமாள், மைம் கோபி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பேசுகையில், “தனி ஒருவன் வெற்றி பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது. அடங்க மறு படத்தின் விமர்சனங்களை படித்த போது அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. கதை என்ன இருந்தாலும் அதை கொடுக்கும் விதம் மிக முக்கியம், இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுக்களும் கார்த்திக்கை தான் சாரும். இந்த படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் சுஜாதா அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம். நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார். இந்த மொத்த குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் கார்த்திக் தங்கவேலு பேசுகையில், “இந்த படம் ஒரு குழு முயற்சி. இந்த கதை மீது என்னை விட அதிக நம்பிக்கை வைத்தது சுஜாதா மேடம் தான். ஜெயம் ரவி எனக்கு இப்போதும் ஒரு நல்ல குருவாக இருக்கிறார். என்னை வழிநடத்துகிறார். என்னை எப்போதும்  ஊக்கப்படுத்துவார். அடுத்து ஒரு பெரிய படத்தை திட்டமிட்டு வருகிறோம், அதை சரியான நேரத்தில் அறிவிப்போம். என்னை விட அதிகம் உழைத்தது உதவி இயக்குனர்களாக இருந்த என் நண்பர்கள் தான். தியேட்டர் விசிட் போனபோது நிறைய பெண்கள் மிகவும் படத்தோடு ஒன்றி பேசினார்கள், இது தான் படத்தின் உண்மையான வெற்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேசும் போது, “முதல் படத்திலேயே என்னை வெற்றிப்பட தயாரிப்பாளராக மாற்றிய ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது அடுத்தடுத்து சிறந்த படங்களை கொடுக்க எங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்திருக்கிறது. அடுத்த படத்தின் கதை இந்த படத்தை விட 10 மடங்கு மிகப்பெரிய படமாக இருக்கும்.” என்றார்.

 

Adanga Maru

 

வசனகர்த்த விஜி பேசுகையில், “ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நானும், அப்பாவும் பார்த்ததில்லை என்றார். அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் என்பதும் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். அடங்க மறுவுடன் வெளியான மற்ற படங்களும் வெற்றி பெறணும் என எந்த பொறாமையும் இல்லாமல் இருந்த இந்த குழுவினரின் மனசு தான் இந்த பெரிய வெற்றிக்கு காரணம்.” என்றார்.

 

இந்த சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், கலை இயக்குனர் இளையராஜா, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய், எடிட்டர் ரூபன், நடிகர் அழகம்பெருமாள், ஆடை வடிவமைப்பாளர் கவிதா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Related News

4003

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery