பிரபல நடிகை சிம்ரன் சிங் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஆற்று பாலத்தின் கீழ் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடியா ஆல்பம் நடிகையான சிம்ரன் சிங், பல சம்பல்பூர் ஆல்பம் பாடல்களில் நடித்திருப்பதொடு, சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மக்களிடம் பிரபலமாக இருக்கும் இவரது உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கே கோய்ரா மாத்தா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அடியில் கிடந்துள்ளது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரது முகம் மற்றும் தலையில் அதிகமான காயங்கள் இருந்தது.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவரை கொலை செய்தது யார், என்ன காரணம் என போலீசார் துப்பறிந்து வருகின்றனர்.

நடிகையின் குடும்பத்தினர் அவரின் கணவர் தான் கொலை செய்துள்ளார் என புகார் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவர் தான் கொலையாளி என்று சிம்ரனின் குடும்பத்தார் தொடர்ந்து கூறிவருவதால், அவரை போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...