Latest News :

அருள்நிதியின் ‘கே 13’ பஸ்ட் லுக் ரிலீஸ்!
Friday January-04 2019

தனது கதை தேர்வின் மூலம், “அருள்நிதி படம் என்றாலே நிச்சயம் பார்க்கலாம்”, என்ற எண்ணத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் அருள்நிதியின் அடுத்த வெளியீட்டுக்கு ‘கே 13’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பரத் நீலகண்டன் இயக்கும் இப்படத்தில் ஸ்ரத் தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடிக்கிறார்.

 

எஸ்.பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர், சாந்தா பிரியா ஆகியோர் தயாரிக்கும் இப்படத்திண் இணை தயாரிப்பாளர்களாக கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ.டி பணியாற்றுகிறார்கள். தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சுதேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவைக்கிறார்.

 

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் பரத் நீலகண்டன், “K13 ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. சில வரம்புகளுக்கு உட்பட்டு, படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது, பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

 

K13 ஒரு இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலான ஒரு திரில்லர் படமாக இருக்கும். நாயகன், நாயகி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அவர்களை இதில் நடிக்க தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அவர்கள் இருவருமே சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். மேலும் தங்கள் படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், உடனடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவசரம் காட்டாதவர்கள். நல்ல கதைக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பவர்கள்.” என்றார்.

Related News

4013

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery