தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்துள்ள விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு, அவரது ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் எதாவது செய்தால் அது விஜயை தான் பாதிப்பதால், ரசிகர் மன்றங்களை விஜய் தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதற்கிடையே, விஜயின் ஆரம்பக்காலத்தில் இருந்து அவரது ரசிகர் மன்ற பணிகளை கவனித்து வந்ததோடு, அவரது பி.ஆர்.ஓ-வாகவும் பணியாற்றிய பி.டி.செல்வகுமார், ‘புலி’ படத்தையும் தயாரித்தார். அப்படம் வெளியீட்டின் போது ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால், பி.டி.செல்வகுமார் தற்போது விஜயை விட்டு விலகியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பி.டி.செல்வகுமார், இப்போதைய ஹிட் நடிகர் என தளபதியை மட்டுமே புகழ்ந்து மற்றவர்களை விமர்சித்து பேசியிருந்தார். இது கொஞ்சம் சர்ச்சையாக பேசப்பட, இது குறித்து விளக்கம் அளித்த விஜய் தரப்பு, பி.டி.செல்வகுமார் விஜயின் முன்னாள் பி.ஆர்.ஓ, அவருக்கும் விஜய்க்கும் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை, எனவே அவரது இதுபோன்ற பேச்சுக்களை விஜய் பேசுவதாக எண்ண வேண்டாம், என்று தெரிவித்தது.
விஜய் தரப்பின் இந்த விளக்கத்திற்கு பதில் அளித்திருக்கும் பி.டி.செல்வகுமார், ”எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். விஜய்க்கும் அவரது குடும்பத்திற்கும் உண்மையான விஸ்வாசம் உள்ள மனிதராக தான் இன்று வரை நான் இருந்து வருகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...