’அகோரி’ படத்தின் டீசரை வெளியிட்ட விஷால்!
Saturday January-05 2019

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் கே.மேனன் இணைந்து தயாரிக்கும் ‘அகோரி’ படத்தை அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்குகிறார்.

 

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும்  நடக்கும்  போராட்டமே கதை, இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர்  காமெடி காதல் சென்டிமெண்ட் எல்லா அம்சங்களும் உள்ள படம். ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான  வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும். 

 

சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாமும் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.

 

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன்  நடித்த காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகளும் படமாகியுள்ளன. 

 

இந்த நிலையில், ’அகோரி’ படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளருமான விஷால் இன்று வெளியிட்டார்.

 

டீசரைப் பார்த்த விஷால், படம் பற்றியும் பக்குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்ததோடு, இது ஒரு வித்தியாசமனமுயற்சியாக இருப்பதாக தான் நம்புவதாக கூறி, படக்குழுவினரை வாழ்த்தினார்.

 

படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும். தெலுங்கில் 'சஹா 'படத்தின் மூலம்  புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5 அடி ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர். இவர்  '144 'பட நாயகி. மைம் கோபி , சித்து,  டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், ஆகியோருடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள். 

 

ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக், நான்கு இசையமைப்பாளர்களின்  கூட்டணி இது. ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார். 

Related News

4016

சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!
Friday July-18 2025

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...

Recent Gallery