Latest News :

தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியனுக்கு மீண்டும் தலைவரான சுப்ரீம் சுந்தர்!
Saturday January-05 2019

தென்னிந்திய திரைபப்ட சினி & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் யூனியனுக்கு சுப்ரீம் சுந்தர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் கடந்த 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம், 50 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில், கடந்த முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஜி.சோமசுந்தரம்  என்கிற எஸ்.டி.சுப்ரீம் சுந்தரே, இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

பிற பதவிக்கு தேர்வானவர்களின் பட்டியல்:

 

தவசிராஜ். S.D - உபதலைவர்

K.ராஜசேகர். S.D - துணைத்தலைவர்

G.பொன்னுசாமி S.A - செயலாளர்

V.மணிகண்டன் S.A - துணைச்செயலாளர்

S.S.M.சுரேஷ் S.A - இணைச்செயலாளர்

C.P.ஜான் S.A - பொருளாளர் 

 

செயற்குழு உறுபினர்கள்

 

S.M.ராஜ் S.A 

P.ரவிக்குமார் S.A 

R.நாராயணன் S.A 

R.பாபு S.A 

A.வெங்கடேஷன் S.A 

U.ஆனந்தகுமார் S.A 

V.காசி S.A 

M.வெற்றிவேல் S.D

M.சுகுமார் S.A

B.K.பிரபு S.D

E.பரமசிவம் S.A

K.சதாசிவம் S.A

 

மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்றுக்கொண்டார்கள்.

 

விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி.S.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

வெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 24 சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.

Related News

4018

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery