’தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘காப்பான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் முடிந்ததும் ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், சசிகுமார் இயக்க இருக்கும் வரலாற்று படத்திலும் சூர்யா நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான சசிகுமார், தற்போது நடிகராக பிஸியானதால், ‘ஈசன்’ படத்திற்குப் பிறகு அவர் படம் இயக்கவில்லை. இதற்கிடையே, வரலாற்று கதை ஒன்றை எழுதிய சசிகுமார், அதை விஜயிடம் கூற, அவரும் கதையை கேட்டுவிட்டு பிடித்திருப்பதாக கூறியதோடு, நிச்சயம இந்த படத்தை பண்ணலாம், என்று கூறினாராம்.
ஆனால், தற்போதுவரை சசிகுமாரின் படம் குறித்து விஜய் எதுவும் கூறாததால், வேறு ஒரு ஹீரோவை வைத்து அப்படத்தை இயக்க நினைத்த சசிகுமார், சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.
அநேகமாக இயக்குநர் சுதாவின் படத்திற்கு பிறகு சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பார், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த படம் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...