ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடன இயக்குநராக பணியாற்றும் சாண்டி, ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த வாரம் சில்வியா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட சாண்டிக்கு இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான காஜலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டா சாண்டி அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
இதற்கிடையே, சில்வியா உடனான அவரது திருமணம் கடந்த வாரம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
இதற்கிடையே, சாண்டியும், அவரது மனைவி சில்வியாவும் இணைந்து டிவி ஒன்றுக்கு பேட்டியளித்தனர். அப்போது முன்னாள் மனைவி காஜல் குறித்து அவரிடம் கேட்டதற்கு, முதல் மனைவியை பற்றி என்னிடம் கேட்காதீங்க, முதல் மனைவி மற்றும் கடந்த கால வாழ்க்கையை மறக்க விரும்புகிறேன்.
நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன், நிறைய அழுதுவிட்டேன் இனி என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். காஜலை பற்றி தயவு செய்து என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம், என்று தெரிவித்தார்.
சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் சன் டிவியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்ததோடு, பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வருகிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியின் போது தான் காஜலுக்கும் சாண்டிக்கும் காதல் மலர்ந்து அவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் எண்ட்ரியாகியிருக்கும் காஜல், காயத்ரி இல்லாத குறையை தீர்த்திருப்பதுடன், நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்தி செல்கிறாராம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...