தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் மணமகளை தேட, இறுதியில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரையும் அவர் தேர்வு செய்யவில்லை. இப்படி தான் இந்த நிகழ்ச்சி முடியும், என்று பலர் முன்பே கணித்திருந்தது வேறு விஷயம்.
இதற்கிடையே, தன்னுடன் நடிக்கும் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் பெண் பார்க்க தொடங்க ஆர்யாவோ தனக்கு காதல் திருமணம் தான் நடக்கும் என்று கூறி வந்தார்.
இந்த நிலையில், நடிகர் ஆர்யா பிரபல நடிகை ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த சாயிஷா சேகலை தான் அவர் திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள சாயிஷாவும், ஆர்யாவும் காதலித்து வருகிறார்களாம். இருவரும் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வரும் நிலையில், இவர்களது திருமண தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஆர்யாவும், சாயிஷாவும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு அவர்களது பெற்றோர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...