இந்த பொங்கலுக்கு சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. அஜித்தின் ‘விஸ்வாசம்’, ரஜினியின் ‘பேட்ட’ என்று இரண்டு பெரிய படங்கள் வெளியாகிறது. இரண்டு படங்களும் 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இரண்டு படங்களில் எந்த படங்களை போடுவது என்று திரையரங்கங்க உரிமையாளர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, விஸ்வாசத்தை காட்டிலும் பேட்டைக்கு தான் பெரிய திரையரங்கங்களும், கூடுதலான திரையரங்கங்களும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் எப்படி இருக்கும், எந்த மாதிரியான விமர்சனங்கள் வரும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருக்க, ‘பேட்ட’ படம் பற்றிய முதல் விமர்சனம், அதுவும் சென்சார் தரப்பில் இருந்து விமர்சனம் வெளியாகியிருக்கிறது.
’பேட்ட ‘ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ரஜினிகாந்தின் அதிரடி இப்படத்தில் நிறைவாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ஈஸ் பேக், தலைவர் ரசிகர்களுக்கு படம் மிகப்பெரிய விருந்து தான். கலகலப்பான காமெடி மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் போனஸாக இருப்பதோடு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தாக்கமும் படத்தில் உள்ளது, என்று தெரிவித்துள்ளனர்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...