சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘விஸ்வாசம்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்ததை தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டாரக்ள்.
மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தை சிவா - அஜித் கூட்டணி பார்த்து பார்த்து செதுக்கியிருப்பதால், ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக இருக்கும், என்று இயக்குநர் சிவா வர, விஸ்வாசத்தின் ரிலீஸை கோலாகலமாக கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆந்திராவில் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருந்த ‘விஸ்வாசம்’ சரியான திரையரங்கங்கள் கிடைக்காததால் ஜனவரி 26 ஆம் தேதி தள்ளி போயுள்ளது. தெலுங்கு சினிமாவி, ‘என்.டி.ஆர்’ உள்ளிட்ட பல பெரிய படங்கள் வெளியாவதால் தமிழ்ப் படங்களுக்கு போதிய திரையரங்கங்கள் கிடைக்காமல் போனதா. விஸ்வாசம் படக்குழுவினர் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர்.
ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக வேண்டிய படம், தற்போது 26 ஆம் தேதிக்கு தள்ளிபோனதால், ஆந்திர மாநில அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...