வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா நாயர். இவர் தொடர்ந்து ‘தொலைபேசி’, ‘செங்காத்து பூமியிலே’ என பல தமிழ்ப் படங்களில் நடித்தாலும், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இதற்கிடையே, இயக்குநர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்து வந்தவர், பிரசவத்திற்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்கு சென்றார். ஆனால், அதன் பிறகு சென்னைக்கு திரும்பவே இல்லை. 2013 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்த பிரியங்கா நாயர், 2015 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தனது கணவருக்கு எதிராக 4 வழக்குகளையும் பதிவு செய்தார்.
பிரியங்கா நாயரின் இந்த நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியளிக்க, இது குறித்து அவரிடம் விசாரிக்கை, தனது கணவர் லாரன்ஸ் ராம் தனது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரப்பியதாக கூறியுள்ளார். மேலும், சினிமாவில் நடிக்க தடை விதித்ததாலும் அவரை விட்டு பிரிய முடிவு செய்தாராம்.
தற்போது, மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் பிரியங்கா நாயர், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...