Latest News :

18 வது ஹீரோயினுடன் ரீ எண்ட்ரியாகும் இயக்குநர் சரண்!
Tuesday January-08 2019

அஜித்தின் ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரண், தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்திருப்பவர் கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘அசல்’ படத்தோடு சிறு இடைவெளி விட்டவர், பிறகு 2017 ஆம் ஆண்டு தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தை வெளியிட்டார்.

 

இந்த நிலையில், மீண்டும் படம் இயக்கும் சரண், தனது புதிய படத்திற்கு ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். கமல்ஹாசனை வைத்து ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் எடுத்த சரண், அப்படத்திற்கு முதல் முறையாக ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்று தான் தலைப்பு வைத்தாராம். பிறகு அதை மாற்றிவிடவே, அந்த தலைப்பை தற்போது பயன்படுத்துகிறார்.

 

உதில் பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக தெலுங்கு நடிகை காவ்யா தப்பார் அறிமுகமாகிறார். இவர்களுடன் நாசர், ராதிகா சரத்குமார், சாம்ஸ், ஆதித்யா, யோகி பாபு, பாகுபலி புகழ் பிரபாகர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.

 

Director Saran

 

பல ஹீரோயின்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இயக்குநர் சரண், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் காவ்யா தப்பார் 18 வது ஹீரோயினாம். அதுமட்டும் இன்றில், ஆக்‌ஷன், காதல், காமெடி என்ற ஜானரில் படம் இயக்கி வந்த சரண், முதல் முறையாக பேண்டஸி பார்முலாவை இப்படத்தின் மூலம் தொட்டிருக்கிறாராம்.

 

சைமன் கே.கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு சரணின் இளைய சகோதரரும் பிரபல ஒளிப்பதிவாளருமான கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் தனது அண்ணன் சரணுடன் இணைந்து பணியாற்றுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

4032

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery