தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத், பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியும் வருகிறார். அப்படி அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், தற்போது இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் உருவாகும் ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் அனிருத் ஒரு பாடல் பாடியுள்ளார்.
”கண்ணம்மா...” என்று தொடங்கும் இந்த பாடல், அனிருத்தின் மந்திரக்குரல் மூலம் ரசிகர்களை மயக்கும் விதத்தில் உருவாகியிருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘றெக்க’ படத்தில் டி.இமானின் இசையில் வெளியான “கண்ணம்மா...” என்ற பாடல் தற்போது வரை ரசிகர்களின் மனதிலும், செல்போனிலும் ஒலிக்கும் பாடலாக உள்ள நிலையில், அனிருத்தின் இந்த புதிய “கண்ணம்மா...” டிமானின் கண்ணம்மாவை காலி பண்ணுகிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...