சிம்பு நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், இப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் மற்றும் படத்தின் இயக்குநர் சிம்பு மீது பல குற்றச்சாட்டுக்களை கூறினார்கள்.
மேலும், சிம்பு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் தான் படத்தின் பட்ஜெட் அதிகமானதாகவும், படத்தின் கதையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்ததாகவும் கூறினார்கள். மேலும், சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் அளித்தார்.
இந்த நிலையில், தன்னை பற்றி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு பரப்பி வருவதாக சிம்பு நீதிமன்றத்தில் மானநஷ்ட்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தன்னை பற்றி அவதூறு கூறி வரும் மைக்கேல் ராயப்பன், தனக்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும், என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்க தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...