கன்னட சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் யஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கே.ஜி.எப்’ திரைப்படம் தமிழிலும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. நேற்று யஷுக்கு பிறந்தநாள். ஆனால், சமீபத்தில் கன்னட நடிகர் அம்பரீஷ் இறந்ததால், யஷ் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.
யஷின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்த நிலையில், ரவி என்ற ரசிகர் யஷின் வீட்டு முன்பு தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ குளித்தார். 70 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது யஷ் வருவாரா, அவரை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார் ரவி. இறுதியில் யஷ் வந்தபோது அவரை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அதன் பிறகு ரவி இறந்துவிட்டார். ரவியின் மறைவால் யஷ் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

ரசிகர்கள் அன்பு வைக்க வேண்டியது தான். அதற்காக தற்கொலை செய்வது, தங்களை காயப்படுத்திக் கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. என்னை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இனி யாராவது தற்கொலைக்கு முயற்சி செய்தால் நான் வர மாட்டேன் என்று யஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...