சமீபத்தில் ஓவியா படத்தின் டீஸர் ஆனது திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களின் பொன்னான கரங்களால் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பு தொகுப்பாக வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் அப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.காண்டீபன் ரங்கநாதன், மூத்த பத்திரிகையாளர் திரு.ஸ்ரீ நாத் , எடிட்டர் திரு. சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கடலூரில் சிறப்பாக செயல் பட்டு வரும் டி.எஸ்.மீடியா என்ற குழுமம் சார்பாக இவ்விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.
'இமாலயன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் 'ஓவியா'.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் 'ஓவியா'வாக நடிக்கிறார்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...