கடந்த 2017 ஆம் தேதி ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பெரும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மெரினா புரட்சி’ படத்திற்கு காரணம் சொல்லாமல் தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்து வருகிறது.
தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த இரண்டு முறையும் காரணமே சொல்லாமல் நிராகரிக்கப்பட்ட நிலையில், ‘மெரினா புரட்சி’ படத்தை தயாரித்த நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மனுவில், ”மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும்” என்றும் கோரியிருந்தது.
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கில் தற்போது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, ”இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குநர் எம்.எஸ். ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள் விளக்கங்கள், நியாயங்களுடன் ரிவைசிங் கமிட்டி முன்பு ஆஜராக வேண்டும்.
அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ‘மெரினா புரட்சி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...