தென்னிந்தியா முழுவதும் தனது கவர்ச்சி மூலம் பிரபலமாக இருந்தவர் ஷகிலா. சென்னையை சேர்ந்த இவர் மலையாள சினிமாவை மிரள வைத்தவர். அங்கிருக்கும் முன்னணி ஹீரோக்களே இவரது படங்கள் வெளியானால், பயப்படும் காலமும் இருந்தது.
தற்போது கவர்ச்சியாக நடிப்பதை விட்டு விட்டு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் ஷகிலா சென்னையில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, ஷகிலாவின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாகிறது. இதில், ரிச்சா சத்தா என்பவர் ஷகிலாவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்த ஷகிலா, ”நான் 15 வயதில் இருந்தே நடிக்க தொடங்கிவிட்டேன். ஆனால், குடும்பத்துக்காகவே கவர்ச்சியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
ஆனால் என்னுடைய குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி நான் சம்பாதித்த பணத்தை பிடுங்கி கொண்டார். நிறைய காதல் தோல்விகளும் கூட. இதனால் தற்கொலை கூட செய்ய முடிவெடுத்தேன்.
வீட்டில் இருக்கும் போது நான் கமல்ஹாசனின் படங்களை தான் பார்ப்பேன். அவரின் ரசிகை நான். அவருடைய கட்சியிலும் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இருக்கின்றது.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...