Latest News :

நடிகையாகும் ரோபோ சங்கரின் மகள்!
Sunday January-13 2019

மேடை நிகழ்ச்சியில் இருந்து தொலைக்காட்சிக்கு வந்த ரோபோ சங்கர், தற்போது வெள்ளித்திரையில் காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அஜித், தனுஷ் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர், தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

 

இந்த நிலையில், ரோபோ சங்கரின் மகள் நடிகையாக கோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். அதுவும் விஜய் படத்தில்

 

ஆம், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் ரோபோ சங்கரின் மகள் நடிக்கிறார். இதற்காக நடத்தப்பட்ட ஆடிசனில் பங்கேற்று அவர் தேர்வாகியுள்ளார்.

 

ஏற்கனவே பல வாய்ப்புகள் ரோபோ சங்கரின் மகளுக்கு வந்தாலும், படிப்பு முக்கியம் என்பதால் அவர் அதை தவிர்த்து வந்தாராம். ஆனால், விஜய் படம் என்பதால் விட்டுவிட கூடாது என்று முடிவு செய்து நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

Related News

4062

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery