Latest News :

10 ஹீரோக்களை இணைத்த ’இளையராஜா 75’
Monday January-14 2019

2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி "இளையராஜா75" இசை விழாவுக்காக  இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும்  மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை  துவக்க விழா சமீபத்தில்   மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில்  பிரம்மாண்டமாக  நடை பெற்றது.  அதை தொடர்ந்து  டிக்கெட் விற்பனை புக் மை ஷோ ஆன்லைனில்  பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.  

 

பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில்  - கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. 'இளையராஜா 75' டீசர்  பல உருவாக்கப்பட்டது. அதை, நேற்று மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில்  விஷால், கார்த்தி, விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் tweet செய்து பரவசப்படுத்தினார்கள். இவர்கள் தங்களது twitter பக்கத்தில் இந்நிகழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறுகிறோம் என்று வீடியோ பதிவேற்றம் செய்து ரசிகர்களையும் வரவேற்று பரவசப்படுத்தியுள்ளார்கள். இதை ரசிகர்களும் பதிவிறக்கம் செய்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்து பரவசப்படுத்தியுள்ளார்கள். அனைவரையும் ஈர்க்கும் விதமாக இன்னும் பல VIPக்கள் வெளியிட உள்ளனர்.

 

பிப்ரவரி 2-ம் தேதி இசைஞானி இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்ங்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும்  விதமாக   கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு  நடனமாடுகிறார்கள். இதை அவர் விழா காண வந்துள்ள  ரசிகர்களுடன் அமர்ந்து ரசிக்கிறார். அடுத்தநாள் 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடை பெறுகிறது. இந்த இரண்டு நாள் விழாவுக்கான டிக்கெட்  நாளுக்கு நாள்  வேகமாக விற்பனை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.


Related News

4064

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery