விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வரும் கெளதம் வாசுதேவ் மேனன், அடுத்ததாக துல்கர் சல்மானுடன் கைகோர்க்க உள்ளார். ஆனால், இயக்குநராக அல்லாமல் நடிகராக. ஆம், துல்கர் சல்மான ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறுகையில், “கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம். ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது, இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது.” என்றார்.
ரிது வர்மா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் கே.பி.ஒய் புகழ் ரக்ஷன் முக்கிய வேடத்தில் நடிக்க, நிரஞ்சன் அகத்தின் நடிகையாக அறிமுகமாகிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெரி சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...