13 வயதில் இருந்தே நடிக்க தொடங்கிய ரம்யா கிருஷ்ணன், சுமார் 34 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். 80 களில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர், சிறிது காலம் சரியான வாய்ப்புகள் இன்றி முடங்கிப்போனார்.
இதற்கிடையே ரஜினியின் ‘படையப்பா’ மூலம் மீண்டும் பிஸியானவர் தொடர்ந்து வில்லி, ஹீரோயின் என்று நடிக்க தொடங்கினாலும், மீண்டு சிறு இடைவெளி ஏற்பட்ட, ‘பாகுபலி’ மூலம் தற்போதும் மீண்டும் பிஸியாகியிருப்பவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் தற்போது நடித்து வரும் வேடம் குறித்த தகவல் ஒன்று ரசிகர்களை மட்டும் இன்றி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆம், ஆபாச படங்களில் நடிக்கும் நடிகை வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.
’ஆரண்யகாண்டம்’ படத்தை இயக்கிய குமாரராஜா தியாகராஜ இயக்கத்தில் உருவாகும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ஆபாச பட நடிகையாக நடிக்கிறாராம். இந்த வேடத்தில் முதலில் நதியா நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் அவர் பாதியிலேயே படத்தை விட்டு வெளியேற, அவருக்கு பதில் அந்த வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க தொடங்கியுள்ளார்.
‘பாகுபலி’ போன்ற பெரிய பெரிய படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், இந்த சமயத்தில் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிப்பதை அறிந்து பலர் அவரது தைரியத்தை பாராட்டினாலும், பலர் ”எதற்காக அவருக்கு வேண்டாத வேலை, சீரியல் மற்றும் சினிமா என்று தமிழக மக்கள் குறிப்பாக பெண்களிடம் பிரபலமாக உள்ளவர், இப்படி ஒரு வேடத்தில் நடிக்கலாமா” என்றும் பேசி வருகிறார்கள்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...