டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பாரத் மோகன் இயக்கும் படம் ‘இக்லூ’ (IGLOO) அம்ஜத் கான், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் பக்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
குறுகிய கால தயாரிப்பாக உருவான இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், பின்னணி வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளனர்.
நேர்மறையான விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு ஜோடியை சுற்றி நடக்கும் ஒரு வலைப்பின்னல் கதை. துருவ நிலையில் வாழும் இக்ளூஸைப் போல நாம் வாழ்கிறோம், என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கும் இயக்குநர் அதற்காகவே படத்தின் தலைப்பாக ‘இக்லூ’ என்று வைத்துள்ளார்.
அரோல் கொரோலி இசையமைக்கும் இப்படத்திற்கு குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். தாமஸ் குரியன் ஒலி வடிவமைக்க, விஜய ஆதிநாதன் கலையை நிர்மாணிக்கிறார். செந்தில் குமரன் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...