சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மகத், பிக் பாஸ் டிவி நிகழ்ச்சிக்குப் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கிறார். அதன்படி பல படங்களில் ஒப்பந்தமாகும் அவர் தற்போது ஒரு படத்தில் சிம்பு ரசிகராக நடிக்கிறார்.
’கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் மகத்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் பிரபு ராம்.சி கூறுகையில், “மகத் ஒரு வட சென்னை இளைஞராக, STRன் தீவிரமான ரசிகராக நடித்திருக்கிறார். உண்மையில், அவர்கள் இருவரின் நட்பு மக்களுக்கு தெரிந்தது, அது மகத் கதாபாத்திரத்திற்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என்று நான் நினைத்தேன். STR ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த தலைப்பு வைக்கப்பட்டதா என்பது குறித்து அவர் பதிலளிக்கும்போது, இந்தப் படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும். இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் என்றாலும், படத்தில் எமோஷனல் காட்சிகளும் மிகவும் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. மகத் மற்றும் பணக்கார குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும்.” என்றார்.
தரண் இசையமைத்துள்ள இந்த படத்தில் என்னியன் ஜெ ஹாரீஸ் (ஒளிப்பதிவு), பிரவின் பாஸ்கர் (எடிட்டர்), கிஷோர் (கலை), லோகன் (பாடல்கள்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்), சாண்டி (நடனம்) மற்றும் கண்ணன் (SFX) ஆகியோரும் பணிபுரிகிறார்கள்.
வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபாவின்ஸ் பால் மற்றும் ஆர்.டி. மதன்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...