இந்திய மொழிகள் பலவற்றில் பெரும் வெற்றி பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘சார்லி சாப்ளின் 2’ படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.
முதல் பாகத்தின் ஹீரோவான பிரபு தேவாவே இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நிக்கி கல்ராணி நடிக்க, இன்னொரு ஹீரோயினாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபுவும், இந்த இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலி சோடா சீதா ஆகியோருடன் தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்...” மிகப்பெரிய ஹிட்டானதுடன் யூடியூபில் 7.5 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கிறது.
முதல் பாகத்தைக் காட்டிலும், காமெடியும் கமர்ஷியலும் கூடுதலாக இருந்தாலும், படம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சார்லி சாப்ளின் 2’ வரும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...