விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் ‘தமிழரசன்’ படத்திற்கு இளையராஜா இசையமைப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். தற்போது இப்படத்தின் பூஜையில் இளையராஜ கலந்துக்கொண்டு படப்பிடிப்பையும் துவக்கி வைத்திருக்கிறார்.
பாபு யோகேஸ்வரன் இயக்கும் இப்படத்தை எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார்.
இப்படத்தின் பூசையில் இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநர் மிலன், தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜி.சிவா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
விஜய் ஆண்டனியுடன் மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜ துவக்கி வைக்க, படப்பிடிப்பு தொடங்கியது.
விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா, ”இந்த படம் பிள்ளையார் சுழி போட்டதில் இருந்தே, எல்லாமே பாசிடிவாகவே நடந்துக் கொண்டிருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்று வாழ்த்தினார்.
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...