தயாரிப்பாளராகவும், எடிட்டராகவும் பல வெற்றிகளை கொடுத்திருக்கும் எடிட்டர் மோகன், தனது மூத்த மகன் மோகன் ராஜாவை இயக்குநராகவும், இளைய மகன் ஜெயம் ரவியை நடிகராகவும் கோலிவுட்டில் களம் இறக்கியது போல, அவர்களும் தங்களது வாரிசுகளை சினிமா களத்தில் இறக்கியுள்ளார்கள்.
ஜெயம் ரவி, தான் நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் தனது மகன் துருவாவை நடிகராக அறிமுகப்படுத்திய நிலையில், இயக்குநர் மோகன் ராஜா தனது பிரணவ் மோகனையும் தற்போது நடிகராக களம் இறக்கியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனியுடன் பிரணவ் நடித்த காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது.
பரத் நடிப்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது...
நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது...
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...