தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் 'இளையராஜா 75' விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR பிரபு, 'இளையராஜா 75' குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் திரு. ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து 'இளையராஜா 75' விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். அவரும் நிச்சயம் வருகிறேன் என்று உறுதியளித்துள்ளார். திரு. கமலஹாசன் அவர்களும் வருவதாகக் கூறியிருக்கிறார்.
பரத் நடிப்பில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது...
நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது...
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...