காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் ஜொளித்த கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் ஆசையால் கையை சுட்டுக் கொண்ட பிறகு மீண்டும் நடிப்பதில் தீவிரம் காட்ட தொடங்கிய நிலையில், தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க, அந்த வீட்டிலும் சில நாட்கள் தங்கிவிட்டு வந்திருப்பவர், மீண்டும் காமெடி வேடங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
2009 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருது பெற்றதால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கும் கருப்பு, ’சந்தனதேவன்’, ‘அருவா சண்ட’, ‘கிடா விருந்து’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். கஞ்சா கருப்பு நடித்த ‘குரங்கு பொம்மை’ இன்று ரிலிஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆகியிருக்க, அடுத்தது ‘பள்ளிப்பருவத்திலே’ என்ற படம் ரிலிசாக உள்ளது.
இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்ளில் சிலர் மீண்டும் வைல்டு கார்டு என்ற முறையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரிக் கொடுக்க, கஞ்சா கருப்பும் மீண்டும் அந்த வீட்டில் எண்ட்ரி கொடுப்பாரா? என்று கேட்டால், ”ஆளைவிடுங்கப்பா சாமி...அது வேற ஏரியா...கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும். நமக்குலாம் அது செட்டாகதுப்பா..” என்று அலறலோடு சொல்கிறார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...