தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, விஷால் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் பலவித வதந்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், கடந்த வருடம் விஷாலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டுதாக அவரது தந்தை கூறியதோடு, பெண் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் கூறினார்.
இதை தொடர்ந்து, விஷால் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் இவர் தான், என்று ஒரு பெண் புகைப்படம் வெளியாக, உடனே சுதாரித்துக் கொண்ட விஷால், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், நேரம் வரும் போது நானே எனது வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிடுவேன், என்று அறிவித்ததோடு, சில நாட்களிலேயே அவரது வருங்கால மனைவியின் புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டார்.
தெலுங்கு நடிகையான அனிஷா அல்லா ரெட்டியை தான் விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். மேலும், இது காதல் திருமணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், விஷால் அனிஷாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் தகவல் வெளியானதில் இருந்து அனிஷாவும் பிரபலமாகிவிட்ட நிலையில், தற்போது அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...