விஜயின் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க தலைவர்கள் சிலர், விஜயை கடுமையாக விமர்சித்தனர். இதனால், பா.ஜ.க தொண்டர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் வார்த்தை போர் நடந்தது.
மேலும், பா.ஜ.க-வின் தேசிய செய்லாளர், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், படத்திற்கும், விஜய்க்கும் எதிராக பல்வேறு கருத்துக்களை கூறினார்கள். இருப்பினும், படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இந்தியா முழுவதும் வசூலில் சாதனையும் படைத்தது.
இந்த நிலையில், விஜயை விமர்சித்த தமிழிசை சவுந்தரராஜன், அஜித் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலர் இணைந்துள்ளனர். அதற்கு நடந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...