தமிழ் சினிமாவின் தற்போதைய மாஸ் நடிகர்களாகவும், அதிகமான ரசிகர்களை கொண்டவர்களாகவும் இருப்பவர் விஜய் மற்றும் அஜித். சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தமிழகத்தில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தை வசூலில் பின்னுக்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் சிலர் பா.ஜ.க கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “இனி தமிழகத்தில் மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் மக்களிடம் எடுத்துச் செல்வார்கள்” என்று கூறியதோடு, அஜித்தை வெகுவாக பாராட்டியும் பேசியிருக்கிறார்.
அவரது இந்த பேச்சும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் அஜித் ரசிகர்கள் தமிழிசை சவுந்தராஜனையும், பா.ஜ.க-வையும் கலாய்க்கவும் செய்து வருகிறார்கள்.
அதிலும் ஒரு அஜித் ரசிகர், “நாங்கள் விஜய் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தாலும் சேருவோமே தவிர, பா.ஜ.க-வுக்கு ஆதரவாக ஒரு போதும் பிரச்சாரம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
விஜயை விமர்சித்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட பா.ஜ.க தற்போது அஜித்தை பாராட்டி ரசிகர்களிடம் வசை வாங்கிக் கொண்டிருக்கிறது.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...